வணிகர் சங்கங்கள் பேரமைப்பு எம்எல்ஏவுக்கு நன்றி தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்கு 2,500 வக்கீல்களை ஈடுபடுத்த முடிவு

திருச்சி, டிச.2: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதில் எந்த வகையிலும் முறைகேடு செய்து விடாதப்படி திமுக வழக்கறிஞர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். கடந்த தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்குமிடையே 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. எனவே பதிவான வாக்குகள் குறித்து கவனமாக குறித்துக்கொள்ள வேண்டும். தேர்தலின்போது வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானால் மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்படும்.

அப்போது பழுதான இயந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளன என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த முறை தமிழகம் முழுவதும் தேர்தலுக்காக திமுக வில் 2,500 வழக்கறிஞர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கறிஞர்கள் தேர்தல் நேரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் அமைச்சர் ரகுபதி, திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், செல்லபாண்டியன், வக்கீல்கள் ஓம் பிரகாஷ், பாஸ்கர், காமராஜ், அந்தோணி, தினகரன் உள்ளிட்ட மத்திய மற்றும் மேற்கு மண்டல வக்கீல்கள் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>