×

எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

கரூர், டிச. 2: கரூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. அவர்களையும் அன்புடன் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பதாகையில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன், அறிந்ததை என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன், எச்ஐவி இல்லா சமுதாயத்தை உருவாக்குவேன், எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளோரை மதிப்பேன். அவர்களுக்கு சம உரிமை அளிப்பேன் என்ற உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நிலையிலும், நன்றாக படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த தலா 3 நபர்களுக்கு முதற்பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000 மற்றும் பாராட்டு கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம் நவாஸ், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சந்தோஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட அலுவலர் சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு