பெரியகோதூர் ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கிய மழை நீரால் கடும் பாதிப்பு

கரூர், டிச. 2: பெரியகோதூர் ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே பெரியகோதூர் பகுதி உள்ளது. கரூர், ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து பெரியகோதூர் செல்லும் அனைவரும் ரயில்வே குகைவழிப்பாதையின் கீழ் சென்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பாதையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மழைக்காலங்களில் குகைவழிப்பாதையில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் மக்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

More