வெண்ணைமலை பகுதியில் குப்பைகளோடு குப்பையாக கிடக்கும் இரும்பு தொட்டிகள்

கரூர், டிச. 2: கரூர் வெண்ணைமலை பகுதியில் குப்பைகளோடு குப்பையாக கிடக்கும் குப்பை சேகரிக்கும் தொட்டியை சீரமைத்து பயன்படுத்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெண்ணைமலை பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்காக இரும்பிலான தொட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதியில் தொட்டிகள் எந்தவித பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக பயன்பாடின்றி கிடக்கிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பை கொட்டும் தொட்டி இல்லாத நிலையில், இந்த பகுதியில் பயனற்ற நிலையில் தொட்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் இதனை இங்கிருந்து அப்புறப்படுத்தி திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>