×

தேவாரம் பகுதியில் நிலக்கடலை கிலோ ரூ.20 விவசாயிகள் கவலை

தேவாரம், டிச. 2: தேவராம் பகுதியில் நிலக்கடலை கிலோ ரூ.20க்கு விற்கப்படுவதால், தேவாரம் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கூடலூர், சின்னமனூர், தேவாரம், கோம்பை, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேரில் நிலக்கடலை விவசாயம் நடக்கும். இங்கு விளையும் நிலக்கடலை மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு தென்மாவட்டங்களுக்கும், எண்ணெய் தயாரிப்புக்கும் அனுப்பப்படும். இந்நிலையில், தேவாரம் பகுதி மலையடிவாரத்தை ஒட்டி சரியான மழை இல்லை. இதே போல் நிலக்கடலை விவசாயத்திலும் விவசாயிகள் ஆர்வம் குறைந்து காணப்பட்து. ஆனால், தேனி மாவட்டத்தில் நிலக்கடலை விலை குறைந்து உள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர். கிலோ ரூ.20க்கு விற்பதால் எண்ணெய் கொள்முதலுக்கு அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.

Tags : area ,Thevaram ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...