கம்பம் அருகே பரபரப்பு ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

கம்பம், டிச. 2: கம்பம் அருகே, ஏடிஎம் மையத்தில் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்பம் அருகே, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி உள்ளது. இக்கிராமத்தில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்மநபர்கள் ஏடிஎம் மெஷினை உடைத்துள்ளனர். ஆனால், திருடவில்லை. இதேபோல, அதே ஊரில் உள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் முன்புற வாயில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் இவைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் டி.எல்.பி.சின்னக்கண்ணு தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இது குறித்து ஏடிஎம் மையங்களில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>