×

மழை பெய்தும் நிரம்பாமல் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

சிங்கம்புணரி, டிச.2: சிங்கம்புணரி பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக பாலாறு, உப்பாறு மற்றும் பெரியார் நீட்டிப்பு கால்வாய் மூலம் 500க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊரணிகள் பாசன வசதிகள் பெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறுகளில் தண்ணீர் இன்றி ஆற்றுப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் மண்டி கிடைக்கிறது. மேலும் ஆற்றிலிருந்து கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதைகளும் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாமல் கண்மாய்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. பெரிய கண்மாய்களான மட்டி கண்மாய், விநாயகர் கண்மாய், ஐநூத்தி கண்மாய், புது கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் கால்நடைகள் குடிக்க கூட தண்ணீர் இல்லை. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் போர்வெல் பாசனத்தை நம்பி குறைந்த அளவு விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். போதிய பருவ மழை பெய்யாமல் போனதால் கண்மாய்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு