டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, டிச.2: சிவகங்கை அரண்மனை வாசல் முன் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்கத்தலைவர் எஸ்ஆர்.தேவர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், சண்முகவள்ளி, முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மாவதி, கருப்பணன், சுந்தரமூர்த்தி, நதியா, விவசாயிகள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் பவானிகணேசன், கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். காரைக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து மாவட்ட செயலாளர் சிவாஜிகாந்தி தலைமையில் போராட்டம் நடந்தது.

Related Stories:

>