×

கிசான் அட்டை பெற இன்று முதல் முகாம்

சிவகங்கை, டிச.2: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று தொடங்குகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூட்டுத் தொழில்கள் புரிந்து வரும் அனைவருக்கும் கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று முதல் டிச.5 வரை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட முன்னோடி வங்கியின் ஒருங்கிணைப்பில் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்கும் இந்த மாபெரும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த பணிகளுக்கும், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் செய்வோர் தங்கள் தொழிலுக்கான தீவனம் போன்ற மூலப்பொருள் வாங்குவதற்கும் மற்றும் நடைமுறை மூலதனம் பெற்றிடவும் கிசான் கடன் அட்டை வழியே கடனுதவி பெறலாம். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளால் பரிசீலிக்கப்பட்டு, கிசான் அட்டை திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பயனாளிகளுக்கு கிசான் அட்டை வழங்கப்படும்.

வங்கிகள் அல்லது கூட்டுறவு கடன் சங்கங்களில் கிசான் கடன் அட்டை பெற்ற விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பதாரர் வங்கி பாஸ்புக் மற்றும் பாஸ்புக் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் உள்ளிட்ட நில ஆவணங்கள், மீன்பிடி தொழில் புரிவோர் மீன்பிடி தொழில் உரிமம் சார்ந்த ஆவணங்கள், குத்தகை முறையில் மீன்பிடி தொழில் செய்வோர் குத்தகை சார்ந்த ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு