சாயல்குடி அருகே பெண்ணை கடத்தியதால் ஆத்திரம் 8 வீடுகள், 4 டூவீலர்கள் உடைப்பு

சாயல்குடி, டிச. 2:  சாயல்குடி அருகே பெண்ணை கடத்திய ஆத்திரத்தில் 8 வீடுகள், 4 டூவீலர்கள் சேதப்படுத்தப்பட்டன. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே பெரியகுளத்தை சேர்ந்தவர்கள் 22 வயதான பெண், குமார்(24). சாயல்குடியிலுள்ள ஒரு தனியார் கடையில் பெண்ணும், தனியார் நிறுவனத்தில் குமாரும் வேலை பார்த்து வந்துள்ளனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குமார் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், குமார் மற்றும் உறவினர்கள் 7 பேரின் வீட்டை தாக்கி சேதப்படுத்தினர். குடிசை வீடுக்கும் தீ வைத்தனர். 4 டூவீலர்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட உடைமைகளையும் அடித்து சேதப்படுத்தியதால் 10பேர் மீது சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>