அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. இன்று தேர்தல் பிரசாரம்

அவிநாசி, டிச.2: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ். எம்.பி. தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரைக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று (டிச.2ம் தேதி) காலை 10 மணிக்கு அன்னூர் ஒன்றியம் பொன்னையகவுண்டன்புதூரில் தி.மு.க. கொடியேற்றி வைத்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். காலை 10.15 மணிக்கு சமுதாயக்கூடத்தில் 150 அருந்ததியருடன் கலந்துரையாடலும், காலை 11.05 மணிக்கு காட்டம்பட்டி பஞ்சாயத்தில் 150 அருந்ததியருடன் கலந்துரையாடலும், சரவணா ஹோட்டலில் 12.05 மணிக்கு 200 இளைஞரணி தோழர்களுடன், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களுடன் கலந்துரையாடல், 12.45 மணிக்கு சமபந்தி விருந்திலும் பங்கேற்கிறார்.

மதியம் 2.15 மணிக்கு சேவூர் ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம் பகுதியில் தி.மு.க. கொடியேற்றி வைத்து, மதுரை வீரன் கோவிலை பார்வையிட்டு அருந்ததியர் மக்களோடு கலந்துரையாடுகிறார். மாலை 3.00 மனிக்கு இராமையாபாளையத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகனை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். மாலை 3.25 மணிக்கு சேவூர் சந்திப்பில், தி.மு.க. கொடியேற்றி வைத்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், மாலை 3.45 மணிக்கு ஒச்சாம்பாளையம் அருந்ததியர் குடியிருப்பு மக்களோடு கலந்துரையாடல்,  சேவூர் முன்னாள் ஊராட்சி தலைவர் மாறனை சந்திக்கிறார். அவிநாசி ஒன்றியம் மாலை 6.05 மணிக்கு செல்வபுரம் அருந்ததியர் மக்களுடனும், மாலை 7மணிக்கு அவிநாசிலிங்கம்பாளையம் கோவிலை சுற்றிப்பார்த்துவிட்டு, அருந்ததியர் மக்களுடனும் கலந்துரையாடுகிறார். இவ்வாறு அறிக்ைகயில் கூறி உள்ளார்.

Related Stories:

>