ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தவறவிட்ட சூட்கேஸ் வாலிபரிடம் ஒப்படைப்பு

ஈரோடு, டிச. 2: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசை போலீசார் மீட்டு பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்தனர். ஈரோட்டில்  தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனோஜ் (30) என்பவர், நேற்று  முன்தினம் ஈரோட்டில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பாட்னா எக்ஸ்பிரஸ்  ரயிலில் பயணம் செய்தார். அவர், ஈரோடு ஸ்டேஷன் பிளாட்பார்ம் 1ல் உட்கார்ந்திருந்தபோது, அவரது சூட்கேசை மறந்துவிட்டு ரயிலில் ஏறி  பயணித்தார். இந்நிலையில், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. முருகானந்தம் ரோந்து  சென்றபோது, நீல நிறத்தில் சூட்கேஸ் ஒன்று கேட்பாராற்று கிடந்தது.  இதையடுத்து போலீசார் அதனை சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.20,500 பணம் மற்றும் பல்வேறு உடமைகள் இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த சூட்கேசை  போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்தனர். இந்நிலையில், சூட்கேசை தவற விட்ட மனோஜ், புகார் அளிக்க ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு  வந்தார். அப்போது, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, அதில் உள்ள ஆவணங்கள்  குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அவரது சூட்கேஸ்தான் என்பதை உறுதி செய்த போலீசார், மனோஜிற்கு போதிய அறிவுரைகள் கூறி சூட்கேசை மீண்டும் அவரிடம்  ஒப்படைத்தனர்.

Related Stories:

>