×

நாங்குநேரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்

நாங்குநேரி, டிச. 2: நாங்குநேரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்றார்.சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகமெங்கும் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பரப்புரை நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாங்குநேரியில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு பங்கேற்பாளராக திமுக கொள்கைப் பரப்பு செயலாளரும் பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்றார்.

மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரியில் சுயஉதவிக்குழு பெண்கள், முதியவர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, மாவட்ட துணை செயலாளர் சித்திக், மாநில தொண்டரணி அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், செல்வகருணாநிதி, செல்லத்துரை, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கிய எட்வின், ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு மற்றும் மூலைக்கரைப்பட்டி நாங்குநேரி நகர செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Stalin ,Nanguneri ,
× RELATED தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண...