உதிரமாடன்குடியிருப்பில் டிச.5ல் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்

உடன்குடி,டிச.2: உடன்குடி அருகே உதிரமாடன்குடியிருப்பில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.5ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உதிரமாடன்குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில்  வரும் 5ம் தேதி காலை 9மணி முதல் மாலை 4மணி வரை தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பொதுமருத்துவம், வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். கண் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு ரூ.1000 மதிப்புள்ள லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும். எனவே, இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>