×

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காகிதத்தில் கப்பல் விட்டு விவசாயிகள் போராட்டம்

அரியலூர், டிச.2: திருமானூர் அருகே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக உள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் காகிதத்தில் கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களில் காகித கப்பலை செய்து ஏரியில் விட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் டெல்லியில் அறவழியில் போராடும் தமிழக விவசாயிகளை, தீவிரவாதிகளைபோல காவல் துறையை மத்திய அரசு ஏவிவிட்டு லத்தியால் அடித்ததை வன்மையாக கண்டித்து. கார்ப்பரேட் கம்பெனிகளை விவசாயத்தில் கொல்லைப்புற வழியாக கொண்டு வந்து, ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருங்கால தலைமுறையினரை அழிக்ககூடிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட பல கோரிக்கைகள் அடங்கிய காகிதத்தில் கப்பல் செய்து விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கிராம விவசாய சங்க நிர்வாகிகள் கனகராஜ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு சேனாபதி ஏரியில் காகிதத்தில் செய்த கப்பல் விட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...