×

பெரணமல்லூர், தண்டராம்பட்டில் பாஜவினரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரணமல்லூர், டிச.2: அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த பாஜவினரை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்ற அந்த மாவட்ட பாஜ கட்சியினர், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், அலுவலத்தை பூட்டு போட முயற்சி செய்து, பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை தரக்குறைவாக பேசி அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், தமிழக அரசின் சின்னத்தை செருப்பால் அடித்து அராஜக செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பாஜ கட்சியினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் ராஜன் பாபு தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் குமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு கலந்து கொண்டு பாஜவின் அராஜகத்தை கண்டித்தும், அவர்களை கைது செய்ய கோரி கோஷமிட்டனர்.இதில் அரசு ஊழியர் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்டார கிளை செயலாளர் ஜோதி பிரகாஷ் நன்றி கூறினார்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு பிடிஓ அலுவலக வளாகம் அருகே நேற்று மதியம் பாஜ கட்சியினரை கண்டித்து, ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கவாசகம், வட்ட கிளை தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி நிதி தணிக்கை மாநில துணைச்செயலாளர் பாபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : servants ,BJP ,Peranamallur ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு