பண்பொழியில் சிறப்பு பொது மருத்துவ முகாம்

செங்கோட்டை,டிச.1:  பண்பொழியில் உள்ள மசூது ராவுத்தர் பள்ளியில் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முகமது இப்ராகிம் தலைமை வகித்தார். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முகமது அபுபக்கர் முகாமை துவக்கி வைத்தார்.  முகாமில் 13க்கும் மேற்பட்ட டாக்டர்கள், கிராம சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் இசிஜி ,ஸ்கேன், பிளட் டெஸ்ட் ,பிரஷர், சுகர் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் பண்பொழி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப்பாளர் கடாபி, டாக்டர் நவாஸ்கான், முகமது அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>