தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல்

குளித்தலை, டிச. 1: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கோட்டைமேட்டை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் பானுமதி(22). இவர் குளித்தலையில் உள்ள தனியார்

நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் தொடர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், அருண், ராசு, ராஜலிங்கம் ஆகிய 4 வாலிபர்களும் இளம்பெண்ணை வழிமறித்தனர். பின்னர் அவரை கட்டாய திருமணம் செய்வதற்காக காரில் ஏற்றி அய்யர்மலை வழியாக நங்கவரம் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக அய்யர்மலை கோயிலுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் ஒருவர் காரில் பெண்ணின் சத்தம் கேட்டு வழிமறித்து நிறுத்தினார். இதனால் பயந்து போன வாலிபர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ராசு(24) மட்டும் பிடிபட்டார். அதனை தொடர்ந்து பானுமதி இச்சம்பவம் குறித்து தாய், தந்தையருக்கு தகவல் தெரிவித்துவிட்டு குளித்தலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அரவிந்தன், அருண், ராஜலிங்கம் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காரில் கடத்தி சென்ற சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>