மறியல் செய்த மா. கம்யூ. கட்சியினர் 30 பேர் கைது

கரூர், டிச. 1: கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கரூர் நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் தண்டபாணி, ஜீவானந்தம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ராஜா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நகரக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி 4 பெண்கள் உள் பட 30 பேர் செய்யப்பட்டனர்.

Related Stories:

>