×

கஞ்சா விற்பனை அதிகரிப்பு தடுத்து நிறுத்த நடவடிக்கை பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர், டிச. 1: கரூர் நகரப்பகுதிகளில் திரும்பவும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த சில மாதங்களாக கரூர் நகரப்பகுதியை ஒட்டியுள்ள டவுன், வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல் போன்ற காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பதுக்கி வைக்க முயற்சி செய்பவர்கள் மீது வழக்கு பதியப்படும் நிகழ்வுகள் அதிகளவு நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கஞ்சா விற்பனை குறித்து மக்கள் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்த நிலையில்தான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நகரப்பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரூர், டிச. 1: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூரில் கொங்கு மண்டலத்தில் புகழ் வாய்ந்த பசுபதீஸ்வரா கோயில் உள்ளது. இந்த கோயிலில் டிசம்பர் 4ம் தேதி அன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. தஞ்சாவூர் பெரியகோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் மக்களுக்கு புரியும்படி குடமுழுக்கு விழா நடைபெற்றதைல, கரூர் பசுபதீஸ்வரா கோயில் குடமுழுக்கை தமிழிலேயே நடத்த வேண்டும். பல்வேறு புகழ்களை கொண்டுள்ள இந்த கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முயற்சி செய்தனர். மனு கொடுக்க தாமதம் செய்யப்பட்டதால், நாம் தமிழர் கட்சியினர் திடீரென, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Welfare activists ,
× RELATED கோடைகாலம் நெருங்குவதால் அமராவதியில்...