×

சாலையில் கிடந்த 6 சவரன் நகைகள் போலீசில் ஒப்படைப்பு

வேளச்சேரி: விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை  சேர்ந்த சீனிவாசன் (25), பாலசுப்பிரமணி (23) ஆகியோர், சென்னை பெரும்பாக்கத்தில் தங்கி, சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.  இவர்கள், நேற்று  வேலை முடிந்து, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். வழியில், பெரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு, புறப்பட தயாராகினர். அப்போது, இவர்களின் பைக் அருகே, 3 சவரன் தங்க செயின், 1 சவரன் பிரேஸ்லெட், 2  மோதிரங்கள் சிதறி கிடந்தது. அதை எடுத்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த தங்க நகைகளை நேர்மையாக ஒப்படைத்த அவர்களை போலீசார் பாராட்டினர். மேலும், இந்த நகைகளை தவறவிட்டது யார் என அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post சாலையில் கிடந்த 6 சவரன் நகைகள் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Sinivasan ,Balasupramani ,Viluppuram ,Dintugul district ,Chennai, Sozhinganallur ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...