வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

ஓசூர், டிச.1:ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் கனகட்டள சத்தியநாராயணமூர்த்தி(45). தனியார் நிறுவன மேலாளர். கடந்த 2012ம் ஆண்டு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, 9 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். இது குறித்து அட்கோ போலீசில் கனகட்டள சத்தியநாராயணமூர்த்தி புகாரளித்தார். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, சேலம் சூரமங்கலம் காவேரி நகரை சேர்ந்த சுதாகர்(41) என்பதும், அவர் ஓசூர் பஸ்தி விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி, சுதாகருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹15 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Related Stories:

>