வர்த்தக சங்க ஆண்டு கூட்டம்

காளையார்கோவில், நவ.30:  காளையார்கோவிலில் நகர் வர்த்தக சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சங்க கட்டிடத்தில் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடந்தது. முகமது யாசின் முன்னிலை வகித்தார். செயலாளர் செந்தில் ஆண்டு அறிக்கை வாசிக்க பொருளாளர் ஷாஜகான் ஆண்டு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார் சங்க உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. பொதுக்குழுவில் மீண்டும் தலைவராக ஜேம்ஸ், செயலாளராக செந்தில், பொருளாளராக ஷாஜகான் மேலும் புதிய ஐந்து செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Related Stories:

>