தமிழ் மாநில காங்கிரஸ் 7-ம் ஆண்டு துவக்க விழா

திருப்பூர், நவ. 30:  திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் 7ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவின் முதல் நிகழ்வாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசங்களும் விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஏரி பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. மேலும் இவ்விழாவில் மாவட்டத் தலைவர் ரத்தினவேல், துணைத் தலைவர் நாராயணசாமி, கார்த்திகேயன். மாவட்ட பொருளாளர் நடராஜ், மாநில இளைஞரணி துணை தலைவர் அபிராமி செந்தில்குமார், உடுமலை நகர் தலைவர் பாலகிருஷ்ணன், தாராபுரம் நகர தலைவர் சுப்பிரமணியன், வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், கருப்பசாமி, காளிதாஸ், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரசாந்த் குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் தங்கமணி, மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>