×

நீலகிரி மாவட்டத்தில் படகு இல்லம், தொட்டபெட்டா திறக்கப்படுமா?

ஊட்டி,நவ.30:  நீலகிரி மாவட்டத்தில் கொேரானா தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வருகை புரிய தடை விதிக்கப்பட்டது. மாதந்தோறும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, அதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அந்த மாதம் 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் மட்டும் திறக்கப்பட்டன. படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம், முதுமலை உள்ளிட்டவைகள் திறக்கப்படவில்லை.

சுற்றுலா பயணிகளும் இ-பாஸ் நடைமுறை டூரிசம் பிரிவில் விண்ணப்பித்து ஊட்டிக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மற்ற சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. வருமானமும் இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வதுடன் அனைத்து சுற்றுலாத்தலங்களையும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சுற்றுலாதலங்களை திறப்பதற்கான தடை தொடரும் எனவும், இ-பாஸ் முறைக்கு பதிலாக இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. இம்முறையில் நீலகிரிக்கு வர விரும்புபவர்கள் அனைவரும் தங்களது விவரங்களை பதிவு செய்தால் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக நீலகிரிக்கு வர கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாத துவக்கத்தில் ஊட்டிக்கு வந்த தமிழக முதல் அமைச்சர் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அனுமதி வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனிடையே இம்மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்ட கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உளள நிலையில், இம்முறை அறிவிக்கப்படும் தளர்வுகளில் பூங்கா தவிர்த்து மற்ற சுற்றுலாத்தலங்கள் திறப்பதற்கான தடை விலக்கப்படுமா என சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : boat house ,district ,Nilgiris ,Thottapetta ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்