×

ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுரை

ஊட்டி, நவ. 30: நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது,  மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களான திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு மேல் மூடிகள் (கம்பி வலைகள்) அமைக்கப்படாமல் உள்ளதால் வனவிலங்குகள் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள திறந்தவெளி குடிநீர் கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் மேல்மூடிகள் அமைக்கப்படாமல் அபாயகரமான நிலையில் இருந்தால், பொதுமக்கள் அதன் விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்