×

நாகர்கோவிலில் எஸ்.பி. தலைமையில் போலீஸ் ெகாடி அணிவகுப்பு

நாகர்கோவில், டிச.1 : குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் பலத்தை நிரூபிக்கும் வகையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் சமயங்களிலும், முக்கியமான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சமயங்களிலும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும். இதில் ஆயுதப்படை, அதிரடிப்படை மற்றும் கலவர தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினர் பங்கேற்பார்கள். இந்த நிலையில், நாகர்கோவிலில் நேற்று திடீரென போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. மணிமேடை, வேப்பமூடு, கோர்ட் ரோடு, டதி ஸ்கூல் சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதில் ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் வேணுகோபால், கல்யாணகுமார், கணேசன், பீட்டர் பால், சாம் வேத மாணிக்கம், வடிவேல், பயிற்சி ஏ.எஸ்.பி. சாய் பிரணீஷ் ஆகியோரும் பங்கேற்றனர். அதிரடிப்படை, ஆயுதப்படையினர் உள்பட சுமார் 135 பேர் கலந்து கொண்டனர். சமூகத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாகவும், போலீஸ் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர். இதே போல் தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் துணை போலீஸ் சரகங்களிலும் அடுத்தடுத்து போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்த எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : S.P. ,Nagercoil ,parade ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை