டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.1: டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேளாண் விரோத சட்டங்களை வாபஸ் பெற கேட்டும், போராடும் விவசாயிகளை துப்பாக்கி முனையில் அடக்க துடிக்கும் பா.ஜ அரசை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் நகர செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தொடக்கி வைத்தார்.

விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ரவி, விஜி, ராமச்சந்திரன், ஆறுமுகம்பிள்ளை, வின்சென்ட், விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கண்ணன், குமரேசன், மிக்கேல் நாயகி, ஐயப்பன், மாதர் சங்கத்தை சேர்ந்த உஷாபாசி, ரெகுபதி, அன்புசெல்வி, அல்போன்சாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த எட்வின் பிரைட், பிரவீன், பெனிஸ்ராஜா, மாணவர் சங்கத்தை சேர்ந்த பதில்சிங், முகம்மது முபீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க போராட்ட குழு தலைவர் சைமன் சைலஸ் நிறைவுரை வழங்கினார்.

Related Stories:

>