×

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் மீண்டும் சிக்னல் திறப்பு

நாகர்கோவில், டிச.1 : நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு, மிக முக்கியமான சந்திப்பு ஆகும். 4 முக்கிய சாலைகள் இதில் சந்திக்கின்றன. காலை முதல் இரவு வரை அதிக வாகன போக்குவரத்து பகுதி ஆகும். இந்த சந்திப்பில் செயல்பட்டு வந்த, டிராபிக் சிக்னல், சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணி முடிந்தும் சிக்னல் அமைக்கப்படாமல் இருந்தது. மழை மற்றும் வெயிலில் நின்றவாறு டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். வாகனங்களை நிறுத்தி அனுப்புவதிலும் கடும் சிரமமாக இருந்தது. எனவே இங்கு மீண்டும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என கோரிக்ைக எழுந்தது. இதையடுத்து அங்கு தானியங்கி சிக்னல் அமைக்க எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டது.  நேற்று முன் தினம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் சிக்னல்கள் முறையாக இயங்கியதை தொடர்ந்து, நேற்று இந்த புதிய சிக்னலை எஸ்.பி. பத்ரி நாராயணன் திறந்து வைத்தார்.

ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிக்னலில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனாவை தடுக்க முக கவசம் அணிய வேண்டும். ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் மின்னணு பலகை இயங்கி கொண்டு இருக்கும். இந்த சிக்னலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், விதிமீறல் வாகனங்களை துல்லியமாக படம் பிடிக்கும் தன்மை கொண்டது என போலீசார் கூறினர். நாகர்கோவில் நகரில் முக்கிய சந்திப்புகள் சிசிடிவி கேமராக்களுடன், புதிதாக சிக்னல் அமைக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags : opening ,Collector Office Junction ,Nagercoil ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா