×

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அகல் விளக்கேற்றி விவசாயிகள் ஆர்பாட்டம்

செய்யாறு, டிச.1: செய்யாறு சுற்றுப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உழவர் பேரவை அமைப்பினர் அகல் விளக்கேற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான மனுக்கள் அதிகளவில் வருகின்றன. அரசு நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் தான் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளாகியுள்ளது. இதில் நீர்நிலையை மீட்க வேண்டியது அவசியம்.எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. ஆக்கிரமிப்பை அகற்ற தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எனவே அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்பதற்கான ஏன் தனியாக ஒரு துறையை உருவாக்க கூடாது என கேள்வி எழுப்பி இருந்தனர்.அதன்படி, செய்யாறு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு என்.எம்.ஆர் உழவர் பேரவை அமைப்பினர், தண்டரை கால்வாயில் விலங்குகளை விட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்.மேலும், இடது புற கால்வாய் தூசி மாமண்டூர் ஏரிக்கு தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுப்பாடி, தளரபாடி, புளுந்தை, அரும்பருத்தி, பெருங்கட்டூர், பாப்பாந்தாங்கல் கிராமம் வழியாக மாமண்டூர் கால்வாயை தூர்வாரி தண்ணீர் பாசனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோஷமிட்டு பொதுப்பணித்துறை அலுவலகம் நுழைவு வாயிலில் அகள் விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

Tags : Demonstration ,removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...