வீடு வீடாக பிளீச்சிங் பவுடர் வினியோகம் வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில்

வேலூர், டிச.1: வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் வீடு வீடாக பிளீச்சிங் பவுடர் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது மண்டலத்தில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 2வது மண்டலத்துக்கு உட்பட்ட சத்துவச்சாரி அன்னை தெரசா 6வது தெரு, 7வது தெருக்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் தெருக்கள் முழுவதும் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் வீடு வீடாக நேரடியாக 100 கிராம் பிளீச்சிங் பவுடர் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதனால் தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கேப்சன்

வேலூர் சத்துவாச்சாரியில் நேற்று வீடு வீடாக மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் பிளீச்சிங் பவுடர் வழங்கினர்.

Related Stories:

>