இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்

சென்னை: சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த 17 வயது சிறுவன் நட்பாகி பழகி உள்ளான். மேலும், அந்த சிறுமிக்கு சில தகவல்களை அவன் பரிமாறி உள்ளதாக கூறப்படுகிறது. இது பின்னர் காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மூன்றே நாளில் காதலனை தேடி அந்த சிறுமி திருவள்ளூருக்கு சென்றாள். அங்கு சிறுவன் அந்த சிறுமியை சந்தித்து பின்னர் திருப்பாச்சூரில் உள்ள  தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கு தனது நண்பனுடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அங்கிருந்து மனவேதனையுடன் திரும்பி சென்ற சிறுமி சில தினங்கள் கழித்து தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறினாள். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  17 வயது சிறுவனை கைது செய்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் காப்பகத்தில் சேர்த்தனர். அவனது நண்பனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>