×

பண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய 28 மணி நேர அதிரடி ரெய்டு நிறைவு பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது

பண்ருட்டி, நவ.30: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுகிசந்திரன்(62), தொழிலதிபர். இவரது மகன் முத்துகுமரன்(42) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேம்பால கட்டுமான பணியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சுகிசந்திரன் அப்பகுதியில் விவசாயம் மற்றும் ரைஸ்மில் நடத்தி வரும் நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 28ம் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் மும்பை மற்றும் சென்னை வருமான வரித்துறையினர் 11 பேர் கொண்ட குழுவினர், சுகிசந்திரன் வீட்டில் நேரில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி போலீசார் ஷிப்டு முறையில் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்தபோது வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி தரவில்லை. நேற்று முன்தினம்  நள்ளிரவு வரை சுகிசந்திரன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் அதிகாரிகள் விசாரணையை முடித்துகொண்டு வீட்டில் கிடைத்த கணக்கில் வராத பலகோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை அதே வீட்டில் உள்ள ஒரு அலமாரியில் வைத்து சீல் வைத்தனர். மேலும் வீட்டில் வருமான வரி சம்பந்தமாக நோட்டீஸ் ஒட்டினார்கள். தணிக்கை அறிக்கை பெற்ற பின்னரே இந்த ஆவணங்களை எடுக்க வேண்டும்  என முத்துக்குமாரிடம் அறிவுரை கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களை மேல் விசாரணைக்காக அதிகாரிகள் தங்களுடன் எடுத்துச்சென்றனர்.

Tags : Billions ,raid ,house ,businessman ,Panruti ,Income Tax Department ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்