திருக்கார்த்திகை திருநாள் எதிரொலி பூக்கள் விலை இருமடங்கு உயர்வு

விருதுநகர், நவ. 30: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. கார்த்திகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விருதுநகருக்கான பூக்கள் அருப்புக்கோட்டை, மதுரை, நிலக்கோட்டை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பூக்களின் நேற்றைய விலை நிலவரம் (கிலோவில்): மல்லிகை ரூ.1,200, பிச்சி கலர் ரூ.800, பிச்சி வெள்ளை ரூ.1,200, முல்லை ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,600, கேந்தி ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.600, சம்பங்கி ரூ.400, கோழி கொண்டை ரூ.100, சிவந்தி ரூ.400, கொளுந்து ரூ.300, அரளி ரூ.300, ஊட்டி ரோஸ் கட்டு ரூ.100, துளசி ரூ.50, பச்சை ரூ.50 என விற்பனையானது.

Related Stories:

>