×

தார்ச்சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து விளையாடும் சிறுவர்கள்

காளையார்கோவில், நவ.30:  காளையார்கோவிலில் இருந்து காட்டாத்தி வழியாக பள்ளித்தம்மம் செல்லும் தார்ச்சாலையில் தேங்கிய தண்ணீரில் சிறுவர்கள் குளித்து விளையாடுகிறார்கள். காளையார்கோவில் அருகில் காட்டாத்தி வழியாகப் பள்ளித்தம்மம், வேம்பனி, அம்மாபட்டினம், உருவாட்டி என பல கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் அதிகளவு விவசாயம் செய்து வருகின்றார்கள். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து கொண்டு வரும் இப்பகுதி கிராமக்கள் தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கறிகள் அதற்கு தேவையான ஈடு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் அப்பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் கல்லூரி மற்றும் பள்ளிகூடம் செல்லவும் இப்பகுதியில் உள்ள உருவாட்டி அம்மன் கோவிலுக்கு செல்லவும் தினமும் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றார்கள். பொதுமக்கள் தினம் தினம் விபத்துகளை சந்தித்து வருகின்றார்கள். பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை தற்போது பாதங்களை பதம்பார்க்கும் அளவிற்கு ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த சிறு மழைக்கே கண்மாய் போல் நீர்தேங்கி உள்ளது. இந்த மழை நீரில் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் குளித்தும் கார் டியூப்பை பயன் படுத்தி நீந்தியும் விளையாடி வருகின்றார்கள். இச்சாலை குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகாரிகளிடம்  பலமுறை மனு கொடுத்துள்ளோம். சில முறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தார்ச்சாலையை உடனடியாக அமைத்துத் தறவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Boys ,
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...