×

விளையாடுவதற்கு அனுமதி

கீழக்கரை, நவ.30: கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல் இல்லாததால், இளைஞர்கள் மிகச் சிரமம் அடைந்து வந்தனர். தனியாருக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் பள்ளி மாணவ, மாணவிகளை தவிர்த்து வெளியாட்கள் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இந்த நிலையில் வருங்கால விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு மேலத் தெருவில் உள்ள உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்திற்கு சொந்தமான ஹமீதியா விளையாட்டு திடலை திறந்து விளையாடுவதற்கு அனுமதி அளித்தனர். இதனால் கீழக்கரையில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் விளையாட்டு மைதானத்தை உபயோகித்து வருகின்றனர். விளையாட்டு மைதானத்தை திறக்க துவக்க விழா நடைபெற்றது. இதில் உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் சுலைமான், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...