×

கே.வி.குப்பம் அருகே வீடுகளில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீர்

கே.வி.குப்பம், நவ.30: ேக.வி.குப்பம் அருகே வீடுகளில் 3 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளது. நிவர் புயல் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் குடியாத்தம் ேமார்தானா அணை நிரம்பியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கவுண்டன்யா மகாநதி வழியாக பல இடங்களில் உள்ள ஏரிகளுக்கு சென்றது. அதன்படி கே.வி.குப்பம் அடுத்த நெட்டேரிக்கு தண்ணீர் சென்றதால் ஏரி நிரம்பிவழிந்தது. இந்த தண்ணீர் அங்குள்ள அண்ணாநகரில் கானாற்றையொட்டி கட்டப்பட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் முன்னதாக இங்குள்ள பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோரை வருவாய்த்துறையினர் மீட்டு பசுமாத்தூர் உயர்நிலைப்பள்ளியில் தங்கவைத்தனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மீட்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : houses ,KV Kuppam ,
× RELATED கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணம் இன்றி...