மன்னார்குடி அடுத்த வேலூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்

திருவாரூர், நவ. 30: திருவாரூர் மாவட்டம், வேலூர் ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை, தீவனப்புள் கரணை, தீவன விதை ஆகியவைகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளாக தாழ்வான பகுதியில் வசித்த மக்களை நிவாரண முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் கொரோனா நோய் தொற்று காலம் மற்றும் மழை காலம் என்பதனை கருத்தில் கொண்டு மக்களின் நலன் காக்கின்ற வகையில் 882 முகாம்களிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் தனபாலன், ஆர்டிஓ புண்ணியக்கோட்டி, கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குநர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>