ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

அன்னூர், நவ.30: அன்னூர் ஒன்றியம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியில் ரூ.1.17 கோடியில் மதிப்பிலான தார் சாலை, ரூ.1.27 கோடி மதிப்பில் 40,300 மரக்கன்றுகள், ரூ.17.64 லட்சம் மதிப்பிலான வடக்கலூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.15 லட்சம் மதிப்பில் அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி ரூ.6 லட்சம் மதிப்பிலான தெலுங்குபாளையம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சட்ட பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கொடி ஏற்றி வைத்தார். விழா முடிவில் பொதுமக்களிடம் மனுக்களை சட்ட பேரவை தலைவர் தனபால் பெற்றுக் கொண்டார். ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி, கரியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஓ.எஸ்.சாய் செந்தில், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>