×

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.29ம் தேதி ஏலம்

தஞ்சை,நவ.30: தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்ய்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது என தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போக்குவரத்து துறையில் வரி கட்டாத மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களால் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 24 பல்வேறு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த வாகனங்கள் அனைத்தும், தற்போது உள்ள நிலையிலேயே சென்னை, போக்குவரத்து ஆணையர், சுற்றறிக்கையின் படி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கடநத நவ. 27ம்தேதிக்கு பின்னர், தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம்.வரும் டிசம்பர் மாதம் 26ம்தேதி காலை 12 மணி வரை ஒப்பந்தபுள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளிகளை டிச.26ம்தேதி மாலை 4 மணிக்குள், தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.டேவணி தொகையாக ரூ.10 ஆயிரத்தை வங்கி வரைவாக செலுத்துபவர்கள் மற்றும் நடப்பு ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிப்படுவார்கள்.ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் நவ. 27ம்தேதி முதல் டிச. 26ம்தேதி வரை தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பார்வையிடலாம். தஞ்சை, துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் (தஞ்சை, வட்டார போக்குவரத்து அலுவலக மாடியில்) வரும் டிச. 29ம்தேதி 11 மணிக்கு ஏலம் விடப்படும்
என தெரிவித்துள்ளார்.

Tags : Tanjore Regional Transport Office ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ