சர்வதேச தபால் சேவையை பயன்படுத்தலாம் பொதுமக்களுக்கு அழைப்பு

ஈரோடு, நவ. 30: ஈரோடு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய தபால் துறை சர்வதேச அளவிலான தபால் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. விரைவு தபால், சர்வதேச பதிவு பார்சல் உள்ளிட்ட பல சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேவையை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சர்வதேச சேவையின் மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மளிகை பொருட்கள், மருந்துகள், ஆடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>