×

விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

விராலிமலை, நவ.30: விராலிமலையில் பிரசித்திப் பெற்ற முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மலைமேல் மாலை 6.45 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கத்துடன வழிபட்டனர். அருணகிரிநாதருக்கு அஷ்ட்டமாசித்தி வழங்கியதாக கூறப்படும் விராலிமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபவிழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி நேற்று மலைமேல் காலை முதல் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீபம் மாலை மலைமேல்; 6.45 மணிக்கு ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி பரவசமுழக்கத்துடன் வழிபட்டனர். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பணியாளர்களும்,விழாக்குழுவினரும், உபயதாரர்களும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும் செய்திருந்தனர்.

Tags : Karthika Maha Deepam ,Viralimalai Murugan Temple ,
× RELATED தைப்பூசத்தையொட்டி கோயில்களில் தேரோட்டம்..!!