மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மங்கலம் கிராமத்தை சோந்தவர் நாகப்பன்(85). இவர், நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சொர்க்கரதம் என்ற வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இடுகாட்டின் அருகே சென்றபோது சாலையில் இருந்த மேட்டு பகுதியினை வாகனம் செல்ல வாகனத்தை உறவினர்கள் பின்னால் தள்ளினர். அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின் வயரில் வாகனத்தின் மேல் இருந்த அலங்கார (ஸ்டீல்) கோபுரத்தின் மீது பட்டது. இதில், வாகனத்தை தள்ளிய 3 பேர் தூக்கி வீசப்பட்டு வாகனத்தின் முன்பக்க டயர்கள் இரண்டும் தீ பற்றியது. இதில் முகில்(24) என்ற வாலிபரின் உடலில் தீப்பற்றி அருகில் இருந்த ரவி(37), பாஸ்கர்(38) ஆகியோர் மீது பரவியது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>