ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி(18). கடந்த வெள்ளிக்கிழமை புதுவாயல் ஆரணியாற்றில் நண்பர்களுடன் மேம்பாலத்தில் இருந்து ராஜாமணி உட்பட 4 சிறுவர்கள் குளிக்க சென்றனர். அப்போது, ஆரணியாற்றில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி தண்ணீர் திறந்துவிட்டதால் நீரின் வேகம் அதிகமானதால் மூன்று சிறுவர்கள் கரையை கடந்தனர். ஆனால் ராஜாமணி நீரில் மாயமானார். இதனையடுத்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று 7 மணி அளவில் புதுவாயல் அருகே கரை ஓரமாக சடலமாக கிடந்த ராஜாமணியின் உடலை மீட்டனர். புகாரின்பேரில் கவரைப்பேட்டை போலீசார் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>