கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் எஸ்பி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் போலீஸ் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பேரம்பாக்கம், மப்பேடு, கொண்டஞ்சேரி, இருளஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருளஞ்சேரி புதிய சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த குமாரசேரி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்(55). கடம்பத்தூர் அகரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>