×

ஆயுதப்படை வளாகத்தில் 140 போலீசாருக்கு மதுபோதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், நவ.30:பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் 140 போலீசாருக்கு மது போதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல் பகுதியில் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு மதுபோதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகள் செயல்பாடு குறித்த நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் ஔவை மகளிர் குழுக்க ளின் சங்கமம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

பெரம்பலூர் புதியபாதை மது போதை மறுவாழ்வு மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுபோதை மறுவாழ்வு மையத்தின் மூத்த ஆலோசகர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் சுகன்யா, கௌதம், தினேஷ், ஆகியோர் கலந்து கொண்டு மதுபோதையால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள், குடும்பம் மற்றும் பணியின் போது ஏற்படும் இடையூறுகள் மதுபோதையால் பாதிக்கப்பட்டவருக்கு அளி க் கப்படும் சிகிச்சை முறைகள், குடும்பநலம் ஆலோச னைகள், தனிநபர் ஆலோசனைகள், மனநல மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பொது மருத்துவ ஆலோச னைகள்குறித்து விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசார் அனைவருக்கும் மது போதை ஒழிப்பு மையத்தின் பணியாளர்கள் கௌதம், தினேஷ் ஆகியோர் புதியபாதை மது போ தை மறுவாழ்வு மையத்தின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர் முடிவில் நிறுவனத்தின் ஆ லோசகர் சுகன்யா நன்றி தெரிவித்தார்.

Tags : policemen ,premises ,Armed Forces ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...