விட்டு விட்டு பெய்த மழையால் சீதோஷ்ண நிலை மாற்றம்: மக்கள் மகிழ்ச்சி

கரூர், நவ. 30: கரூரில் நேற்று மாவட்டம் முழுதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து கரூரின் சீதோஷ்ண நிலையை மாற்றியது. நிவர் புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் கடந்த இரண்டு நாட்களூக்கு முன்பு இரவு 2மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதோடு, பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மாவட்டம் முழுதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து, கரூரை குளிர்வித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் மேலும் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Related Stories:

>