சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பரிதாப பலி

கரூர், நவ. 30: கரூர் தாந்தோணிமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் கந்தசாரப்பட்டியை சேர்ந்தவர் மாரியாயி(65). இவர், சம்பவத்தன்று கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு நடந்து சென்றார். அப்போது சின்னமநாயக்கன்பட்டி பிரிவுச் சாலை அருகே சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மாரியாயி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>