நெல்லை டவுனில் சிறுமிகள் தீபம் ஏற்றி யோகா பயிற்சி

நெல்லை,நவ.30: நெல்லை டவுனில் கார்த்திகை தீப திருநாளையொட்டி சிறுமிகள் தீபம் ஏற்றி யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட யோகா கழகம் சார்பில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு டவுனில் யோகா பயிற்சியின் போது தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு லிட்டில் பிளவர் மாடல் பள்ளி தாளாளர் மரியசூசை தலைமை வகித்து துவக்கி வைத்தார். யோகா மாஸ்டர் அழகேச ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறுவர்,சிறுமிகள் தீபங்கள் ஏற்றி பல்வேறு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை பெற்றோர்கள் உள்பட பலர் கண்டுகளித்தனர்.

Related Stories:

>