அயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

அயோத்தியாப்பட்டணம், நவ.30: அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜா என்கிற ராஜசேகரன் முன்னிலையில், ஒன்றிய கவுன்சிலர் சந்திரகலா ராஜசேகரன் பரிந்துரைப்படி, அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றியம், பெரியகவுண்டாபுரம் ஊராட்சியில், ஜே.ஜே.நகரில் ₹5லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூஜை போடப்பட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் கே.எம்.ரவி, ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலா, ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய ஜெ., பேரவை இணை செயலாளர்கள் ராகுல், ரவி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>